பாகிஸ்தானில் கடும் மழை – 34 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் போன்ற அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, மின்சார ஒழுக்கு மற்றும் நிலச்சரிவு போன்றன ஏற்பட்டு வருகின்றன.

மேலும், கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கனமழையால் நாட்டின் பல்வேறு நகரங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

இந்தநிலையில், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மின்சார ஒழுக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், மேலும் 2 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்