அரசியலைவிட்டு ஒதுங்குகிறார் தீபா!

அரசியலில் இருந்து விலகுவதாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, தனது பேரவையை அ.தி.மு.க.வுடன் இணைத்துவிட்டேன்.

ஆகையால் யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம் குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.

ஆகையால் தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இனியாவது நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor