‘பட்டாஸ்’ வெளியீடு அறிவிப்பு!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘எதிர்நீச்சல்’, ‘கொடி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு ‘பட்டாஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.

‘புதுப்பேட்டை’ திரைப்படத்திற்கு பின் 13 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ்-சினேகா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மெஹ்ரீன் பிர்சாடா, நவீன் சந்திரா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

‘களரி’ கலைக்கு முன்பு இருந்த சோழர்கள் தற்காப்பு கலையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் மகன் தனுஷின் பெயர் தான் ‘பட்டாஸ்’ என்று கூறப்படுகின்றது.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். இப்படத்தை வரும் தீபாவாளி பண்டிகைக்கு வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor