நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்த பிக்குவிற்கு மனநோயாம்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய வளாகத்தை சுவீகரித்து பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர், மனநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளர்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“கடந்த வாரம் முல்லை நீராவியடி பிள்ளையார் ஆலய அறங்காவலர்கள் என்னை சந்தித்தார்கள். அங்கே முகாமிட்டிருக்கும் பெளத்த தேரருக்கு எதிராக அறங்காவலர் அளித்துள்ள புகாரை பொலிஸார் விசாரிக்கவில்லை என்று சொன்னார்கள்.

தொலைபேசியில் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் “ஏன், பிக்குவை கண்டு விசாரித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவில்லை” என கேட்டேன்.

“இல்லை ஐயா, பிக்குவுக்கு மனநிலை சரியில்லை. இப்பொழுது அவர் கொழும்பில் மனநல சிகிச்சை பெற்று வருகிறார்” என்று எனக்கு பொறுப்பதிகாரி பதில் சொன்னார்.” என, அந்த பதிவில் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்