புலிகளின் புதையலை தேடியோர் பூநகரியில் கைது.

கிளிநொச்சி- மண்டகல் ஆறு பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 5 போ் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.

பூநகாி பகுதியில் உள்ள உள்ள மண்டகல் ஆறு பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது வடக்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினரால் சந்தேகத்திற்கிடமான நடத்தையில் இருந்த இந்த நபர்கள் கண்காணிக்கப்பட்டு பரிசோதித்த பின்னர் இந்ந நபர்கள் புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு அந்த நபர்களையும் புதையல் அகழ்விற்க்கு பயன்படுத்திய உபகரணங்களும் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 29, 34, 35, 47 மற்றும் 48 வயதுடைய அவிஸ்சாவெல்ல மற்றும் பாதுக்க பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்