முச்சக்கர வண்டி விபத்தில் குழந்தை பலி – அனுராதபுரத்தில் சோகம்.

அனுராதபுரம்- பதவியா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 6 மாத குழந்தை உயிாிழந்துள்ளது, தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

குறித்த விபத்து நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அனுராதபுரம் – பதவியா பிரதான வீதியூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் அதே வீதி வழியாக எதிர்த்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும், 6 மாத குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அனுராதபுரம், கல்கடவெல, தீபத்துகம பகுதியைச் சேர்ந்த 6 மாத குழந்தையான இசுற செத்சிறு என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் தாயாரான 29 வயதான ஹங்கனி சமன்திலக படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதவியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்