இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு!

அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடுத்து காரணமாக பாடசாலைகளின் இரண்டாவது தவணைக்கான கல்வி அமர்வுகள் திட்டமிடப்பட்ட திகதியை விட மிகவும் தாமதமாக தொடங்கியது.

பாடசாலையின் இரண்டாம் தவணைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஏப்ரல் 22 ஆம் திகதியே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் 6 முதல் உயர்தர மாணவர்களுக்கு மே 6 ஆம் திகதியும் ஆரம்ப பிரிவினருக்கு 13 ஆம் திகதியும் இரண்டாம் தவணை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor