
ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் அமைச்சு பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக இருந்த புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.