ஹக்கீமின் வீட்டில் 60 லச்சம் திருட்டு!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரவூப் ஹக்கீமின் மனைவி சானாஸ் ஹக்கீமினால் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இந்நிலையில், கொழும்பு மத்திய பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்சாவின் ஆலோசனைக்கு அமைய கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor