தீயில் எரிந்து அழிந்தது வரலாற்று புகழ்மிக்க தேவாலயம்!

Westphaliaவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க Church of the Visitation தேவாலயம் தீவிபத்தில் இடிந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இத் தீவிபத்து இன்று காலை (உள்நாட்டு நேரம்) இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து Bishop Joe S. Vásquez கருத்து தெரிவிக்கையில்,

“மிகப்பெரிய இழப்பை சந்தித்த Westphalia மக்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். அத்துடன், தீயணைப்பு வீரர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த வரலாற்றுத் திருச்சபையின் மக்களாகிய நீங்கள், இன்று பிரார்த்தனையில் ஈடுபட தயவுசெய்து என்னுடன் சேருங்கள்.” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த தேவாலயம் 1895ம் ஆண்டு திறக்கப்பட்டது. மேலும் இந்த Church of the Visitation தேவாலயம் டெக்சாஸ் மாநிலத்தின் மரப்பலகையினால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய தேவாலய கட்டடங்களில் ஒன்றாகும்.


Recommended For You

About the Author: Editor