கீரிமலையில் பராமரிக்கப்பட்ட மாடு உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக வைத்து பராமரிக்கப்பட்ட வெளிநாட்டு இனத்தை சேர்ந்த மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இறைவனடி சேர்ந்தது.
இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் , அதனை இறைச்சியாக்குவதற்கு பெரியளவில் விளம்பரம் செய்யப்பட்டது. அதற்கு யாழில் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பி, இருந்த நிலையில் சமூக ஆர்வலர்களினால் மாடு மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனை அங்கு வரும் ஏராளமான அடியவர்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது வழமையாகும்.

இந்நிலையில் முதுமை காரணமாக குறித்த மாடு இறந்த நிலையில், இறந்த மாடு சமய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்