வானை கடத்திய கும்பல் பொலிசார் மீது துப்பாக்கி சூடு – இராணுவம் பதிலுக்கு துப்பாக்கி சூடு

துப்பாக்கியை காட்டி வாகனத்தை கடத்தி சென்று பொலிஸாா் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்தவா்கள் மீது இராணுவம் நடாத்திய துப்பாக்கி சூட்டில் குறித்த நபா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டிருக்கின்றாா்.

மத்தேகொட பகுதியில் வேனொன்றைக் கடத்திச்சென்ற சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் மீது, பாணந்துறை பின்வத்த பகுதியில் வைத்து இராணுவத்தினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுத்துப்பாக்கி வகையைச் சேர்ந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபோதே, இராணுவத்தினரால் சந்தேகநபரின் பாதங்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதில் காயமடைந்த சந்தேகநபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள், நேற்றிரவு 7.30 மணியளவில் கட்டுத்துப்பாக்கியைக் காண்பித்து வேனொன்றை கடத்திச் சென்றுள்ளனர். வேனில் பொருத்தப்பட்டிருந்த GPS உபகரணத்தை வைத்தே குறித்த வேன் பயணித்த பகுதி அடையாளம் காணப்பட்டு, அங்குருவாத்தொட்ட பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குருவாத்தொட்ட பொலிஸார் நால்வர், குறித்த வேனை நிறுத்துவதற்கு முயன்ற போதிலும், அதிக வேகத்தில் வேன் பயணித்துள்ளது.

வேன் காலி வீதியூடாக பயணித்ததை தொடர்ந்து, அது குறித்து காலி வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வாகனத்தை நிறுத்துவதற்கு முற்பட்ட இராணுவத்தினரை விபத்துக்குள்ளாக்கி சென்றதில்,

இராணுவ சிப்பாய் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கானதுடன், மற்றுமொரு சிப்பாய் சிறு காயங்களுக்கு உள்ளானார். எவ்வாறாயினும் குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்று, பாணந்துறை நோக்கி பயணித்த குறித்த வேனை இடைமறித்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில், தப்பிச்செல்ல முற்பட்ட ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்