30.07.2019 ராசி பலன்

மேஷம்

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக் கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடை யும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங் களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்காலம் பற்றிய பயமும், வீண் டென்ஷனும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல
செய்தி வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

கன்னி

கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை சிந்தனை பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

தனுசு

தனுசு: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

கும்பம்

கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்


Recommended For You

About the Author: Editor