மீண்டும் அமைச்சு பதவி ஏற்ற முஸ்லீம் தலைமைகள்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிக் கொண்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும், தமது பதவிகளை இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஏற்றுக்கொண்டனர்.

இந்தத் தகவலை அரச ஊடகமான ரூபவாஹினி தொலைக்காட்சி சேவை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நேற்று இடம்பெற்ற சந்திப்பையடுத்து தமது அமைச்சுப் பதவிகளை மீள ஏற்பதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்