பொம்மை விமானங்களின் விளையாட்டுத் திருவிழா!

ரஷ்யாவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த வடிவமைப்புகளைக் கொண்ட விமானங்களுக்கான விளையாட்டு விழா இடம்பெற்றது.

தலைநகர் மொஸ்கோவில் கடந்த வாரயிறுதி நாட்களில் நடைபெற்ற இந்த விழாவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட விமான பொம்மைகளை சுமந்து கொண்டு கால்வாயில் குதிக்க வேண்டும் என்பது விளையாட்டின் விதி.

இதற்காக விதவிதமான பொம்மை விமானங்களைத் தயாரித்த போட்டியாளர்கள் தாங்களும் விசித்திரமான முறையில் வேடமிட்டுக் கொண்டனர்.

போட்டி தொடங்கியதும், தங்களின் உதவியாளர்களின் உதவியுடன் விமானம் கால்வாய்க்குள் தள்ளி விடப்படும் நேரத்திற்குள் பறக்கும் வேகம், விமானத்தின் அழகு போன்றவை குறித்து மதிப்பெண் வழங்கப்படும். இந்த நிகழ்வைக் கண்டு ரசிக்க ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


Recommended For You

About the Author: Editor