போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்ட ரூமோனியா பிரஜை விளக்கமறியலில்

போலி கடன் அட்டையைப் பயன்படுத்தி தானியங்கி இயந்திரங்களில் 2.5 மில்லின் ரூபாயினை பெற்று மோசடி செய்த ரூமேனிய நாட்டவரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ரூமேனிய நாட்டவரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் வங்கியால் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவினரால் பல போலி ஏ.டி.எம். அட்டைகளுடன் வங்கியில் இருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி இந்த அட்டைகளைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட அர்வன் ஆண்ட்ரி டேனியல் என்ற ரூமேனிய நாட்டவர் மேற்கொண்ட பல பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த நபரை ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்