மட்டு.இராணுவ வாகனத்திற்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் தீ.

மட்டக்களப்பு- பேருந்து நிலையத்தின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் ஒன்றும், ஜீப் வண்டி ஒன்றும் திடீரென தீப்பிடித்து எாிந்ததால் நகருக்குள் சற்று நேரம் பதற்றமான நிலை உருவானது.

இன்று காலை குறித்த பஸ் நிலையத்தின் பின்பகுயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளுக்கு அருகில் இராணு புனர்வாழ்வு பிரிவினர் ஜீப்வண்டி ஒன்றை நிறுத்தி விட்டு இராணுவ புனர்வாழ்வு காரியாலயத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பகல் 1 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததையடுத்து அங்கிருந்த பெதுமக்கள் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த போதும் மோட்டார் சைக்கிள் முற்றாக தீயில் எரிந்துள்ளதுடன் இராணுவ ஜீப்வண்டியும் சிறியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸ் குற்ற தடயவியல் பிரிவு மற்றும் இராணுவத்தினர். வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

 


Recommended For You

About the Author: ஈழவன்