யாழில்.நாமல்.

நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ஸ யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வழிபாடுகளையும், சா்வமத தலைவா்கள் சந்திப்பையும் மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர் மதத் தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் , சர்வமதத் தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றனர்.

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்குச் சென்ற நாமல் ராஜபக்ச, ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பின்னர் நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீனக் குரு முதல்வர் ஞானதேசிக சோமசுந்தர சிவச்சாாிகள் சுவாமியும் சந்தித்து பேசினாா்.

அதனை தொடர்ந்து நாக விகாரைக்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டதுடன் , விகாரதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.


Recommended For You

About the Author: ஈழவன்