யாழ்.நோக்கி வந்த பேருந்து மதவாச்சியில் விபத்து – மூவர் பலி.

மதவாச்சி அநுராதபுரம் பிரதான வீதியின், மதவாச்சி காவல்துறை பிரிவிற்குட்ப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று இரவு 11.50 அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்தொன்று எதிர்த்திசையில் பயணித்த லொரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது பேருந்தில் பயணித்த 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில், அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – நல்லூர், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 12, 30 மற்றும் 53 வயதுகளை உடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்துக்கு காரணமான லொரி சாரதி குறித்த பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளதோடு, பேருந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றது


Recommended For You

About the Author: ஈழவன்