மாவை கந்தன் ஆலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை அண்மித்த பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு அண்மித்த வீதியோரமாக கைக்குண்டு ஒன்று இருப்பதனை அவதானித்த மக்கள் காங்கேசன்துறை பொலிசாருக்கு அறிவித்தனர்.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவுக்கு அறிவித்தனர்.அவர்கள் இரவு 8 மணியளவில் அப்பகுதிக்கு வந்து கைக்குண்டை மீட்டு சென்றனர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் சித்திர தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. நாளைய தினம் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நடைபெற வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ஈழவன்