மதமாற்ற கூட்டத்தை துரத்தியடித்த பொன்னாலை இளைஞர்கள்.

பொன்னாலையில் ஆட்கள் அற்ற வீடொன்றில் சண்டே ஸ்கூல் நடத்துவது என்ற பெயரில் போதனையிலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ சபையொன்றின் மதமாற்றக் கூட்டம் ஒன்று இன்று (28) துரத்தியடிக்கப்பட்டது.

ஊர் மக்களும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து இவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து துரத்தியுள்ளனர்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மகோற்சவம் எதிர்வரும் 8 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் பொன்னாலைக்குள் புகுந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று துரத்தியடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆட்கள் அற்ற வீடொன்றில் சண்டே ஸ்கூல் என்ற பெயரில் போதனை இடம்பெற்றமை தெரியவந்தது.

ஊரவர்கள் அங்கு சென்றபோது, வெளி இடத்தில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களுக்கு போதகர் ஜெபித்துக்கொண்டிருந்தார்.

யாரைக் கேட்டு வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டபோது, வெளியிடத்தில் வசிக்கும் குறித்த வீட்டுக்காரர் தமக்கு வீட்டை வழங்கினர் எனவும் கிராம சேவையாளரிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் அந்த அல்லேலூயா கூட்டத்தினர் கூறினர்.

இது தொடர்பாக கிராம சேவையாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது தான் அனுமதி வழங்கியிருக்கவில்லை என்றார்.

இதையடுத்து அங்கு போதனையில் ஈடுபட்டிருந்தவரையும் அவரோடு வந்தவர்களையும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு மக்கள் தெரிவித்தனர். அவர்கள் தாம் போகமாட்டார்கள் எனவும் மீண்டும் இங்கு வருவார்கள் எனவும் கூறினர்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்களை அவர்களை அச்சுறுத்தி வெளியேற்றினர். மீண்டும் ஊருக்குள் வந்தால் உரிய வகையில் கவனிக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.


Recommended For You

About the Author: ஈழவன்