மாவை கந்தனின் தேர் வெள்ளோட்டம்.

இராணுவ ஆக்கிரமிப்பால் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர்  மாவிட்டபுர கந்தசுவாமி ஆலய தேர் எரியூட்டப்பட்ட நிலையில் புதிய சித்திர தேர் வடிவமைக்கப்பட்டு இன்றைய தினம் வெள்ளோட்டம் நடைபெற்றது.

தொன்மையும் அற்புதங்கள் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவருகிறது. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது.

அந்நிலையில் 29  வருடங்களின் பின்னர் புதிய சித்திர தேர் வடிவமைக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

அதி சிறப்­பும் மிகப் பெரி­ய­து­மான பஞ்­ச­ர­தங்­க­ளின் நடு­நா­ய­க­மாக விளங்­கும் சண்­மு­கப் பெரு­மா­னின் முக உத்­தர திருத்­தேர் 1990ஆம் ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற உள்­நாட்­டுப் போரில் ஏனைய நான்கு தேர்­கள், சப்­ப­ரம், திரு­மஞ்­சம், கைலா­ய­வா­க­னம் என்­ப­வற்­று­டன் இராணுவத்தினரால் முற்­று­மு­ழு­தாக  அழிக்கப்பட்டது.

அந்நிலையில் இப்­பொ­ழுது முன்­பி­ருந்த முக ­உத்­தர தேரைவிட இன்­னும் பெரி­தா­க­வும் 45 அடி உய­ரம் கொண்டு மேலும் சிறப்­பான சிற்­பங்­க­ளை­யும் கொண்­ட­தாக தேர் இந்த ஆண்டு அமைத்து முடிக்கப்பட்டது.இந்தச் சிறப்பு வாய்ந்த மாபெ­ரும் முக உத்­தர தேர் இன்று ஞாயிற்­றுக்­கி­ழ­மை­ வெள்­ளோட்டம் நடைபெற்றது.

 


Recommended For You

About the Author: ஈழவன்