என் சொத்தை பறிக்க கூடாது – மல்லையா

தன்னுடைய சொத்துக்கள் மற்றும் உறவினர்க‌ளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இடைக்கால‌த் தடைக் கோரி, தொழிலதிபர் விஜய் மல்லையா ‌உச்ச நீதிம‌ன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் கிங் பிஷர் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை தவிர, வேறு எந்‌த சொத்தையும் பறிப்பதற்கு இடைக்காலத் தடைக் கோரி, மல்லையா சார்பில் அவரது சட்டத்தரணி உச்ச நீதிமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) வழக்குத் தொடர்ந்துள்ளார்.

குறித்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் மல்லையா, தற்போது இங்கி‌லாந்தில் தஞ்ச‌ம் அடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது.

மேலும் விஜய் மல்லையாவுக்கு எதிரான வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதேபோன்று மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கு இங்கிலாந்‌‌தில் நடைபெற்று வ‌ருகிறது.

இந்நிலையிலேயே தனது சொத்துக்களை பறிப்பதற்கு இடைக்காலத் தடைக் கோரி மல்லையா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்