இந்திய விமான படைக்கு அப்பாச்சி ஹெலிகொப்டர்கள்

இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 அதிநவீன அப்பாச்சி ஹெலிகொப்டர்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கியுள்ளது.

இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர் பிரிவை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக விமானப்படைக்கு நவீன ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இதற்காக அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்திய விமானப்படைக்கு 22 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகொப்டர்களை தயாரித்து வழங்க போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக 4 அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களை போயிங் நிறுவனம் இந்தியாவிற்கு இன்று வழங்கியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து உத்திரபிரதேசத்திலுள்ள காசியாபாத் விமானப்படை தளத்தை அடைந்துள்ள இந்த ஹெலிகொப்டர்கள், விரைவில் விமானப்படையின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஏனைய ஹெலிகொப்டர்களும் ஒப்படைக்கப்படுமென போயிங் நிறுவனம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்