ஈஸ்டர் தாக்குதல் – இராணுவ தளபதி விசாரணை வலயத்திற்குள்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க மீண்டும் அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் ஏற்கனவே தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் அழைக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களையும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி அழைக்கவும் தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார, சாகல ரத்னாயக்க ஆகியோர் அழைக்கப்படுவார்கள் என தெரிவுக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சாட்சியமளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தெரிவுக்குழு முன் அழைக்கப்படுவார் என்றும் தெரிவுக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என பிரதமர் அலுவலகம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்