மைத்திரி – மஹிந்த இணைவு ?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கிடையிலான புதிய கூட்டணி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியை அமைப்பதற்காக பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு திட்டத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த இறுதி அறிக்கையின் அடிப்படையில், இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் இதுவரையில் இந்த விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்