தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியென தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, ”இந்தத் தேர்தல் ஏப்ரல் மாதமே முடிந்திருக்க வேண்டியது. சிலர் செய்த சதியால் வேலூர் தேர்தல் இரத்து செய்யப்பட்டது.

ஆனால் ஏப்ரல் மாதமே தேர்தல் நடந்திருந்தால், நாம் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்போம்.

தி.மு.க மீது களங்கத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேடுவதற்கு ஆளும் கட்சியினர் முனைகின்றனர்.

ஆனால், அவர்கள் எத்தகைய சதிச் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றியடைவோம்.

அந்தவகையில் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என்பதில் எந்ததொரு மாற்றமும் இல்லை” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்