கர்நாடகாவில் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்.

கர்நாடகாவில் 14 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் அதிரடி உத்தரவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பித்துள்ளார்

இதனூடாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்வடைந்துள்ளது.

கர்நாடகாவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்- ம.ஜ.த அரசு தோல்வி அடைந்தமையினால், குமாரசாமி தன்னுடைய முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து 105 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள பா.ஜ.க, எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.

மேலும் முதலமைச்சர் எடியூரப்பா, தன்னுடைய பெரும்பான்மையை கர்நாடக சட்டசபையில் நாளை நிரூபிக்க உள்ளார்.

இந்நிலையிலேயே 14 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர், தகுதி நீக்கம் செய்துள்ளார்.

அதன்படி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 11பேரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்


Recommended For You

About the Author: ஈழவன்