எழுத்து மூல உத்தரவாதம் தருவோருக்கே எமது ஆதரவு – தமிழ் மக்கள் கூட்டணி.

தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பாக எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்புக்கே ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.

மேலும், இந்த உறுதிமொழியானது இந்தியாவின் மத்தியஸ்த்துடன் நடைபெறவேண்டும் என்றும் அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அந்த கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிக முக்கியமாகக் காணப்படுகின்றன. நாட்டிலுள்ள அனைத்து தமிழ் மக்களின் வாக்குகளையும் இணைத்து எமக்கு வேண்டியவற்றை சாதித்துக்கொள்ள முடியும்.

தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டம் தொடர்பாக எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்புக்கே ஆதரவு வழங்கப்படும். இந்த உறுதிமொழியானது இந்தியாவின் மத்தியஸ்த்துடன் நடைபெறவேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்