சிங்கள இராச்சியம் உருவானால் , தமிழ் இராச்சியமும் உருவாகும் – சிறிகாந்தா.

சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால், நிச்சயமாக தனி தமிழ் இராச்சியமொன்றும் நாட்டில் உருவாகும் என டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இது ஒரு பெளத்த நாடென்றும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும்  அண்மைமையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்னர் ஒரு தேரர் கருத்துரைத்தபோது சிங்கள இராச்சியத்தை உருவாக்குவேன் என தெரிவித்திருந்தார்.

அதற்கு நான் கூறினேன் சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால், நிச்சயமாக தனி தமிழ் இராச்சியமொன்றும் நாட்டில் உருவாகும்.

சிங்கள பெளத்த பேரினவாதம் அரசியல் தீர்வை வழங்க ஒருபோதும் அனுமதிக்காது. அதுவே வரலாறு. எந்தவொரு பிரதான சிங்கள கட்சியும் பௌத்த மதத்தவர்களைத் தாண்டி துணிச்சலோடு அரசியல் தீர்வை வழங்காது” என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்