விமானத்தில் இருந்த பெட்டி பறந்ததால் , மற்றொரு விமானம் சேதம்

விமானமொன்றின் பொதிகள் வைக்கப்படும் கொள்கலன் (பெக்கேஜ் கன்டெய்னர்) ஒன்று, கடும் காற்று காரணமாக உருண்டு சென்று மற்றொரு விமானத்தில் மோதிய சம்பவம் மும்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் விஸ்தாரா நிறுவனத்தின் (Vistara Airlines)  விமானமொன்று இதனால் சேதமடைந்துள்ளது.

மற்றொரு விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் வெற்று கொள்கலன் ஒன்று இவ்வாறு காற்றினால் உருண்டு சென்று விஸ்தாரா விமானத்தில் மோதியதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. இச்சம்பவத்தையடுத்து பழுதுபார்க்கும் நடவடிக்கைகளுக்காக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளதுதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்