
ஐஸ்லாந்தின் கடற்கரையொன்றில் சுமார் 50 திமிங்கிலங்கள் இறந்தநிலையில் கரையொதுங்கிய சம்பவம்அண்மையில் இடம்பெற்றது.
ஐஸ்லாந்தின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள லோங்கப்ஜோருர் கடற்கரையில் இத்திமிங்கிலங்களின்உடல்கள் கரையொதுங்கிக் கிடந்தன.
தொலைதூர பிரசேத்திலுள்ள இக்கடற்கரையில், கடலிலிருந்து பல மீற்றர்கள் தொலைவில் மேற்படிதிமிங்கிலங்களின் உடல்கள் காணப்பட்டன.
அங்கு, ஹெலிகொப்டர் மூலம் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சுமார் 50 திமிங்கிலங்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், மேலும் பல திமிங்கிலங்கள் முற்றாகமணலில் மூடப்பட்டிருக்கலாம் என ஹெலிகொப்டரின் விமானி டேவிட் ஷ்வார்ஸன்;ஸ் தெரிவித்துள்ளார்.