ரிக்டோக்கால் வேலையை இழந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்

பொலிஸ் நிலையத்துக்குள் நடனமாடி, அக்காட்சிகளை டிக் டொக் வீடியோவாக வெளியிட்ட இந்திய பெண்பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் மேஹ்சானா மாநிலத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் பணியாற்றிய அர்பிதா சௌத்ரி எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்துக்குள் கடமை நேரத்தின் பின்னர் சிவில் உடையில் இவர் நடனமாடும் காட்சி, இணையத்தில் பரவியது.

அதையடுத்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை அர்பிதா சௌத்ரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்என பிரதி பொலிஸ் அத்தியட்சகர் மஞ்சிதா வஞ்சரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலதிகவிசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

டிக்டொக் வீடியோக்கள் மூலம், ஆபாசப்படங்கள் பரவுவதாகவும், இளம் பருவத்தினர் பாதிக்கப்படும்அபாயமுள்ளதாகவும் குற்றம்சுமத்தப்பட்டதையடுத்து, சென்னை மேல் நீதிமன்றம் டிக்டொக் வீடியோவுக்குதடை விதித்திருந்தது.  எனினும், இச்செயலியின் செயற்பாட்டை மேம்படுத்துவதாக டிக்டொக்உறுதியளித்ததையடுத்து தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்