எந்த பெண்ணுக்கும் என்னை பிடிக்கவில்லை – சல்மான்கான்

தன்னை திருமணம் செய்துகொள்வதற்கு எந்தப் பெண்ணும் இதுவரை விருப்பத்தை வெளியிடவில்லை என பொலிவூட் நட்சத்திரமான சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பொலிவூட்டின் சுப்பர் ஸ்டார்களில் ஒருவராக விளங்குபவர் சல்மான் கான்.

அவரின் திரைப்படங்கள் வசூலில் சாதனைகளை படைக்கின்றன.

பிரபல நடிகைகள் சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப் உட்பட பலரை சல்மான் கான் காதலித்தார்.

தற்போது அவர் ருமேனியாவின் இயூலியா வந்தூரை காதலிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

பெரும் புகழும் பணமும் சல்மான் கான் வசம் இருந்தபோதிலும், 53 வயதான சல்மான் கான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

கடந்த மாதம் வெளியான பாரத் திரைப்படத்தில் தனது முன்னாள் காதலி கத்ரினா கைப்புடன் சல்மான் கான் இணைந்து நடித்திருந்தார்.

அப்படத்தில் சல்மான் கானுக்கு கத்ரினா கைப் திருமண ப்ரபோஸ் செய்வது போல் காட்சி இடம்பெற்றிருந்தது.

ஆனால், நிஜ வாழ்க்கையில், தன்னைத் திருமணம் செய்துகொள்வதற்கு எந்தப் பெண்ணும் ப்ரபோஸ் செய்யவில்லை என அண்மையில் அளித்த செவ்வியொன்றில் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

‘ஒருபோதும் அது நடக்கவில்லை. ஏனெனில்;  நான் கென்டில் லைட் டின்னருக்கு (மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவு உட்கொள்ளல்) செல்வதில்லை.

நான் என்ன உட்கொள்கிறேன் என்பதை மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் என்னால் பார்க்க முடியாது.

எனினும், நான் அணுகப்படாதவனாக உணர்கிறேன்’ என சல்மான் கான் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்