கை,கால் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து குடும்பப்பெண் சடலமாக மீட்பு

பருத்தித்துறை தம்பசிட்டிப் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பின் பக்கமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்த சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின்னரே கொலையா தற்கொலையா? எனத் தெரிவித்தார்.

தம்பசிட்டி தோட்டக் காணியிலிருந்து சடலம் இன்று முற்பகல் கண்டறியப்பட்டது. பதில் நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ நிபுணரின் முன்னிலையில் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது.

தம்பசிட்டி கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதி, ஜெகநாத குருக்கள் கிருபாலினி (வயது -35) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

“கைகள் பின்பக்கமாக கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. கால்களும் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் பஞ்சாபி சோல் ஒன்று சுற்றப்பட்டிருந்தது.

குடும்பப் பெண், யாழ்ப்பாணம் பொலிஸ் திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Recommended For You

About the Author: ஈழவன்