சீன நிலச்சரிவில் சிக்குண்டு 24 பேர் உயிரிழப்பு!

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் குயிஸ்ஹோ மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் என்ற கிராமத்தில் கடந்த 23ஆம் திகதி நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன்போது 21 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியாளர்களினால் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், காணாமல் போயுள்ள 25 பேரை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor