நீருக்குள் திறக்கப்பட்ட இராணுவ அருங்காட்சியகம்

நீருக்குள் இருக்கும் இராணுவ அருங்காட்சியகம் ஜோர்தானில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானின் ஆக்குபா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அருங்காட்சியகம் கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் உள்ளிட்ட இராணுவத்தளபாடங்கள் இந்த நீருக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில் இடம்பிடித்துள்ளன.

செங்கடலில் உள்ள பவள பாறைகளில் போர் புரிவது போன்ற வடிவமைப்பில் குறித்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூச்சு விடுவதற்கு உதவுகின்ற கருவிகளை பயன்படுத்துவோர், முக்குளிப்போர் மற்றும் கண்ணாடி கூரையுடைய படகுகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த அருங்காட்சியதை கண்டு ரசிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor