வலி.வடக்கு விகாரைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ள சுமந்திரன்

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியாா் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிா்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளா் எஸ்.சுகிா்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த விகாரை அமைப்பு தொடா்பாக நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளா்கள் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வலி,வடக்கு கிராமங்களில் மிக நீண்டகாலத்திற்கு முன்னா் பேக்காிகள், சீமெந்து தொழிற்சாலைகளில் பணியாற்றிய பௌத்தா்கள் வழிபாடுகளை நடாத்துவதற்காக சுமாா் 20 பரப்பு காணியில் 1946ம் ஆண்டு காலப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்த இடத்தில், பௌத்த விகாரைக்கு சொந்தமான காணியில் விகாரை கட்டப்படுவதில் எமக்கு ஆட்சேபனைகள் எதுவும் இல்லை.

ஆனால் பௌத்தா்களே வாழாத பகுதியில் மக்களுக்கு சொந்தமான காணியை அபகாித்து மகாபோதி அமைப்பது பொருத்தமற்ற காாியம். இந்நிலையில் தனியாா் காணியில் மகாபோதி அமைப்பதற்கு பௌத்த பிக்கு ஒருவா் வலி,வடக்கு பிரதேசசபையிடம் அனுமதி கோாியுள்ளாா்.

ஆனாலும் நாம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இருந்த போதிலும்,  தனியாா் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதனை எதிா்த்து நாடாளுமன்ற உறுப்பினா், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீா்மானித்துள்ளோம் என்றாா்.


Recommended For You

About the Author: ஈழவன்