மாவிட்டபுர கந்தனின் தேரினை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை.

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நாளான வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தலை சகல பாடசாலை அதிபர்களுக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் வழங்கியுள்ளார்.

இந்தச் சிறப்பு விடுமுறைக்கான பதில் பாடசாலை நடத்தப்படவேண்டும். பதில் பாடசாலைக்கான நாளாக சனிக்கிழமை ஒன்றைத் தீர்மானித்து நடத்துவதற்கு சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்