அதிபரின் அறைக்குள் சென்று வினாத்தாளை திருடிய மாணவர்கள் கைது

அதிபாின் அறைக்குள் புகுந்து 2ம் தவணை பரீட்சை வினா தாள்களை திருடிய மாணவா்கள் இருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மஸ்கெலியா பெயார்லோன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் இருவரே பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என  போலீசார் தெரிவித்தனர். பாடசாலையின் அதிபர் பொலிசாருக்கு அறிவித்தமையை தொடர்ந்தே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாம் தவணைக்கான அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள்கள் அதிபரின் அறையினுள் காணப்பட்ட ஆவண காப்பகத்தில் பாதுகாப்பாக பூட்டிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் ஆவணக்காப்பகத்தின் பூட்டினை உடைத்து வினாத்தாள்களை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து ஒரு மாணவரின் வீட்டிலிருந்து 9 வினாத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்பினை சேர்ந்த குறித்த மாணவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்