பல்கலை வெட்டுபுள்ளிகள் வெளியாகின- 30 ஆயிரத்து 830 மாணவர்கள் தெரிவு.

2018ம் ஆண்டு உயா்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தொிவாகும் மாணவா்களுக்கான குறைந்தபட்ச வெட்டுபுள்ளி வெளியிடப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

www.selection.ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தாம் தகுதி பெற்றுள்ள பயிற்சிநெறி மற்றும் பல்கலைகழகங்களை ஆராயவும் மாணவர்களுக்கு முடியும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பல்கலைகழக சேர்க்கைகாக இம்முறை சாதாரண அணுகலின் கீழ் 30 ஆயிரத்து 830 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 645 மாணவர்கள் அதிகம் என  தெரிவிக்கப்பட்டள்ளது.

http://www.selection.ugc.ac.lk  இங்கே கிளிக் செய்து வெட்டு புள்ளியை பாா்வையிடலாம்..


Recommended For You

About the Author: ஈழவன்