தவறுதலாக மோட்டார்சைக்கிளை இயக்கிய பெண் ரயிலில் மோதி மரணம்.

ராகம பகுதியில் மோட்டார் சைக்கிளை தவறுதலாக இயக்கிய பெண் புகையிரதத்தில் மோதி உய்ரிழந்துளார்.

ராகம பகுதியை சேர்ந்த பட்டதாரியான திலானி சந்துரிக்கா (வயது 25) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
புகையிரதம் வருவதற்கான சமிஞ்சை ஒளி ஒளிர்ந்து கொண்டிருந்த வேளை , புகையிரத கடவைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் வைத்துக்கொண்டு குறித்த பெண் நின்றுள்ளார்.
புகையிரதம் கடவையை கடந்து சென்று கொண்டிருந்த போது , தவறுதலாக மோட்டார் சைக்கிளின் ஆக்சிலேட்டரை குறித்த பெண் திருகிய போது , மோட்டார் சைக்கிள் இயங்கி புகையிரதத்துடன் மோதுண்டதிலையே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ராகம போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்