யாழில்.குளவி கொட்டியதில் முதியவர் மரணம்

ஊரெழு அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டு குளவிக் கூடு கலைந்து குளவி கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா (வயது-63) என்ற முதியவரே உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து ஆலயத்திலிருந்த பக்தர் இடைய குழப்ப நிலை காணப்பட்டது. ஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தில் வருடாந்தத் திருவிழாவில் இன்று மூன்றாம் திருவிழா நடைபெற்றது.

மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா திசையும் ஓடினர். குளவி மூவருக்கு மேற்பட்டோருக்கு கொட்டியது. முதியவர் ஒருவர் குளவி கொட்டியதால் துடிதுடித்தார். உடனடியாக அவசர அம்புலன் சேவைக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அம்புலன்ஸ் வண்டிச் சாரதியையும் முதலுதவி உதவியாளரையும் குளவி துரத்தியது.

மேலும் ஒரு இளைஞனை மோட்டார் சைக்கிளில் சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றருக்கு குழவி துரத்திச் சென்று தாக்கியுள்ளது.

சம்பவ இடத்துக்கு கோப்பாய் பொலிஸார் சென்ற போது அவர்களையும் குளவி துரத்தியதால், உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர். அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. குழவியைக் கலைப்பதற்கு எரிவாயு நிரப்பவேண்டும் என்பதால் தீயணைப்பு படை சம்பவ இடத்துக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்