கிளிநொச்சியில் தமக்குள்ள மோதிக்கொண்ட சிங்கள மாணவர்கள்.

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாக மாணவா்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற மோதலில் 11 மாணவா்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்திசயாலையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில் காய­ம­டைந்த 11 மாண­வர்­கள் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். கிளி­ நொச்சி அறி­வி­யல்­ந­கர்ப் பகு­தி­யில் அமைந்­துள்ள பொறி­யி­யல் பீடத்­தைச் சேர்ந்த சிரேஸ்ட மாண­வர்­கள் மற்­றும் முத­லாம் ஆண்டு மாண­வர்­க­ளுக்கு இடை­யில் ஏற்­பட்ட முரண்­ பாடே மோத­லுக்கு கார­ணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட அனை­வ­ருமே பெரும்­பான்மை இனத்­த­வர்­கள் என்­றும் தெரி­ விக்­கப்­பட்­டுள்­ளது.


Recommended For You

About the Author: ஈழவன்