போலிஸ் வாகனத்துடன் மோதிய போதை பொருள் கடத்தல்கார்கள்.

பொலிஸாரின் வாகனங்களின் மீது வேன் ஒன்று  மோதியதால், அவ்வேனில் ஏற்றிச் செல்லப்பட்ட பெருந்தொகையான  போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் நேற்றுமுன்தினம் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொலிஸ் நிலையமொன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் இரண்டின் மீது, வேகமாக வந்த வேன் ஒன்று மோதிவிட்டுச் சென்றது.

இதையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மேற்படி வேனை கண்டுபிடித்தனர்.  விபத்து நடந்த இடத்திலிருந்து 10 நிமிடப் பயணத்தூரத்தில் மேற்படி வேன் நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த வேனை பொலிஸார் சோதனையி;ட்டபோது, அதற்குள்ளிருந்து  273 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போதைப்பொருளின் பெறுமதி சுமார்  200 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள்  (சுமார் 2460 கோடி இலங்கை ரூபா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


Recommended For You

About the Author: ஈழவன்