ஆலயத்திற்குள் புகுந்த கும்பல் அட்டகாசம் – திருவிழா நிறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் அலைகரை முருகன் ஆலய திருவிழாவுக்குள் நுழைந்த ரவுடி கும்பல் அட்டகாசம் புாிந்ததுடன், ஆலயத்தில் இருந்தவா்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

காவடிஆட்டம் மற்றும் இரவு நிகழ்வாக மாலைக்கு வாதாடிய மைந்தன், காத்தவராயன் சிந்துநடைக்கூத்து என்பன நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

திடீரென ஆலயத்துக்குள் புகுந்த குழு ஒலிபெருக்கி சாதனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், பறை அடித்தவர்கள் மற்றும் ஆலய வளாகத்தில் இருந்த வர்த்தகர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்