டோக்கியோ ஒலிம்பிக் பதக்கங்கள் வெளியீடு!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

2020-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் நிலையில், மிகச் சரியாக அதற்கு ஓராண்டு உள்ளதை குறிப்பிடும் வகையில் இந்த ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி அந்த பதக்கங்கள் வெளியிடப்பட்டன.

556 முதல் 450 கிராம் எடையில் இருக்கும் இந்தத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் செல்லிடப்பேசி உள்ளிட்ட பழைய எலக்ட்ரானிக் பொருள்களை மறுசுழற்சி செய்து அதிலிருந்து செய்யப்பட்டவையாகும்.
அந்தப் பதக்கங்களில் வெற்றிக்குரிய கிரேக்க பெண் கடவுளான நைக்-இன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் பதக்கங்களை வடிவமைப்பதற்காக போட்டி நடத்தப்பட்டது. மொத்தமாக கிடைக்கப்பெற்ற 400 வடிவங்களில், இறுதியாக ஜுனிச்சி கவானிச்சி என்பவர் அளித்த வடிவமே இறுதி செய்யப்பட்டு, பதக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 5,000 பதக்கங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor