
மாலைதீவு நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) பதவியேற்றுள்ளார்.
87 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பெரும்பான்மையை பெற்றுள்ள மாலைதீவின் ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) மூலம் சபாநாயகராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மொஹமட் நஷீட் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, அவருக்கு எதிராக 13 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதேவேளை, மாலைதீவிலிருந்து வெளியேறிய மொஹமட் நஷீட் இலங்கையில் பல வருடங்களாக தங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.