மகனை தேடி 12 வருடங்களாக அலைந்த தாய் மாரடைப்பால் மரணம்

இறுதி யுத்தத்தில் கடற்படையினாிடம் ஒப்படைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாயொருவா் முல்லைத்தீவில் திடீரென உயிாிழந்திருக்கின்றாா்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடாத்தப்படுகின்ற அனைத்துப் தொடர் போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்த குறித்த தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த செபமாலை திரேசம்மாள் என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மகனான செபமாலை செல்வன் என்பவரை கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடாத்திவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2008,07.௦1 அன்று மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரிடம் தனது மகனை ஒப்படைந்த நிலையில் இன்றுவரை அவர் குறித்த நிலைமைகள் எதனையும் அறியாத நிலையில் இவர் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்