பாகிஸ்தானில் இந்து மருத்துவர் மீது மத அவமதிப்பு வழக்கு

பாகிஸ்தானில் அண்மைக் காலங்களில் மத அவமதிப்பு தொடர்பாக பலர் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். இதன்போது ஆசியா பீபி என்ற பெண் கூட நாட்டை விட்டு வௌியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது மத அவமதிப்பு மேற்கொண்டதாக குற்றம்சுமத்தப்பட்ட இந்து மருத்துவர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற மருத்துவர் இந்து மதத்தை சேர்ந்தவராவார். இவர் கால்நடை மருத்துவராக செயற்பட்டு வருகிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

குறித்த பகுதியை சேர்ந்த தலைமை மதகுருவான மவுலவி இசாக் நோக்ரி என்பவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் மருத்துவரான ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் மருத்துவருக்கு எதிராக புலாடியான் நகரில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போராட்டக்காரர்கள் இந்துக்களின் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்து எரித்தனர். பாதைகளில் வாகன சில்லுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த கலவரங்களுக்கு மத்தியில் மருத்துவரான ரமேஷ்குமார் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


Recommended For You

About the Author: Editor